Monday, June 21, 2010

The World Bank (உலக வங்கி)

The World Bank (உலக வங்கி)




உலக வங்கி குழுமம், ஐந்து பன்னாட்டு நிருவனங்களை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். வறுமை குறைப்பு, நாடுகளின் முன்னேற்றம், உறுப்பு நாடுகளில் பன்னாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது ஆகியன உலக வங்கியின் குறிக்கோள்களாகும். உலக வங்கியும் அதன் அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலை நகரான வாஷிங்டன் டி.சி. யில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் யும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஆம்ப்ஷயர் நகரின், பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் மானிட்டரி மற்றும் ஃபினான்ஷியல் மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இன்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

உலக வங்கி நிர்வாகம்

இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம்.


இவற்றையும் பார்க்க
அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை
அனைத்துலக நாணய நிதியம்
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி


உலக வணிக அமைப்பு
உலக வணிக அமைப்பு (ஆங்கிலம்)
Organisation mondiale du commerce (பிரெஞ்சு)
Organización Mundial del Comercio (எசுப்பானியம்)

தோற்றுவிக்கப்பட்ட நாள் 1 ஜனவரி 1995
தலைமை அலுவலகம் ஜெனீவா, சுவிட்சர்லாந்து
அங்கத்துவம் 153 உறுப்பு நாடுகள்
அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானியம் [1]
இயக்குனர் நாயகம் பஸ்கால் லாமி
வரவு-செலவு 180 மில்லியன் சுவிஸ் பிராங்க்குகள் (சுமார். 163 மில்லியன் USD) 2008 இல்.[2]
வேலையாட்கள்Staff 625[3]
இணையத்தளம் www.wto.int
உலக வணிக அமைப்பு (World Trade Organization) என்பது, பன்னாட்டு வணிகத்தை மேற்பார்வை செய்வதற்கும், அதைத் தாராண்மைப் படுத்துவதற்குமாக ஏற்படுத்தபட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இவ்வமைப்பு உருவானது.

உலக வணிக அமைப்பு, நாடுகளிடையே நடைபெறும் வணிக விதிகள் தொடர்பில், ஏறத்தாழ முழு உலகம் தழுவிய நிலையில் செயல்படுகின்றது. இது புதிய வணிக ஒப்பந்தங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் பொறுப்பானது. அத்துடன் பெரும்பாலான உறுப்பு நாடுகளால் கையெழுத்து இடப்பட்டு அவற்றின் நாடாளுமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக வணிக அமைப்பின் ஒப்பந்தங்களை உறுப்பு நாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதையும் இவ்வமைப்பு கண்காணிக்கிறது.

இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது



அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை

உலக நாடுகள் அமெரிக்காவின் டொலரை நம்பிக்கையின் அடிப்படையில் பணமாக பயன்படுத்துகின்றன. இந்த செயல்ப்பாட்டை அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை (American Dollar System) எனலாம். இந்த நம்பிக்கை ஐக்கிய அமெரிக்காவின் ஆயுத பலத்தையும், தெழில்நுட்ப திறனையும் அடிப்படையாக கொண்டது. இப்படியான ஓழுங்கமைவில் ஒரு நாடு தனக்கு வேண்டிய இறக்குமதிகளை செய்வதற்கு அமெரிக்காவின் டொலர் தேவையாக இருக்கும். கடன், வட்டி, நாட்டுப் பொருளாதார திடநிலையை பேணுவதற்கான சேமைப்பு ஆகியவைக்கும் அமெரிக்க டொலரே தேவை.

அனைத்துலக நாணய நிதியம்


அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம்.

பொருளடக்கம்
1 அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு
2 இவற்றையும் பார்க்க
3 மேற்கோள்கள்
4 வெளி இணைப்புகள்

அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு
அண்மைக் காலத்தில் (2006, 2007) பல கடன் நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வரவுதால், வருமான அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது.

The British East India Company பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி

The British East India Company (பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி)



பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஒரு கூட்டுப் பங்குக் கம்பனி ஆகும். 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக ரீதியான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இக் கம்பனிக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 1858 ஆம் ஆண்டில் இது ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியத்துடன் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.


ஆரம்பகாலக் கம்பனியின் கொடி. அக்காலத்தில், சென் ஜார்ஜின் சிலுவை பொறித்த இங்கிலாந்தின் கொடி இடது மேல் மூலையில் காணப்படுகின்றது.
1707 இல் பெரிய பிரித்தானியா உருவாக்கப் பட்ட பின்னர் கம்பனிக் கொடி, கண்டன் கொடியில் (canton flag), யூனியன் ஜாக் கொடியைத் தாங்கியதாக அமைந்தது.
1801 க்குப் பின்னர் கம்பனிக் கொடி பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் சேர்ந்து உருவான ஐக்கிய இராச்சியத்தின் கொடியைத் தாங்கியிருந்தது.பொருளடக்கம் [மறை]
1 நாடுகளின் அரசியலில் கம்பனியின் தாக்கம்
2 வரலாறு
2.1 ஆரம்ப காலம்
2.2 ஆரம்பக் கட்டமைப்பு
2.3 இந்தியாவில் காலூன்றியமை
2.4 விரிவாக்கம்
2.5 முழுமையான தனியுரிமைக்கான பாதை
2.5.1 வணிகத் தனியுரிமை
3 இவற்றையும் பார்க்க



நாடுகளின் அரசியலில் கம்பனியின் தாக்கம்
இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இக் கம்பனி, பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 இல், வங்காளத்தில், சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றைக் கம்பனி, முகலாயப் பேரரசரடமிருந்து பெற்றுக்கொண்டது. இது, இந்திய வணிகத்தில், கம்பனிக்குத் தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல், பிளாசி போரில், சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்தியக் கம்பனியை ஒரு, வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில், பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து, இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர் துரத்தப்பட்டனர்.

பெரிய பிரித்தானியாவிலிருந்து, இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளிலும், கம்பனி ஆர்வம் காட்டியது. 1620 ஆம் ஆண்டிலேயே, தென்னாபிரிக்காவின், டேபிள் மலைப் (Table Mountain) பகுதிக்கு உரிமை கோரியது. பின்னர், சென் ஹெலனாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்தது. கம்பனி, ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவியது. கடற் கொள்ளைகளைத் தடுப்பதற்கு, கப்டன் கிட் (Captain Kidd) என்பவனை அமர்த்தியது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியிலும் ஈடுபட்டது.


வரலாறு

ஆரம்ப காலம்
இக் கம்பனி, கிழக்கிந்தியாவில் வணிகம் செய்யும், இலண்டன் வணிகர்களின் கம்பனி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. இதனை நிறுவிய சிறந்த முயற்சியாளர்களும், செல்வாக்குக் கொண்டவர்களுமான வணிகர் குழுவினர், 15 ஆண்டுகளுக்கு, கிழக்கிந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனியுரிமையை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த இக் கம்பனியில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். தொடக்கத்தில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் டச்சுக் காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரித்தானியக் கம்பனியால் அசைக்க இயலாத நிலை. கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக் கூட வைத்திருக்க முடியவில்லை. 1608 ல், கம்பனிக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவை அண்டி அமைந்திருந்த மசிலிப்பட்டினத்தில் புறக்காவல்தளம் (outpost) ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கம்பனி பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. 1609 இல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், கம்பனிக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையை கால வரையறையின்றி நீடித்தான். எனினும், கம்பனி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டாவிடில், அந்த உரிமம் செல்லுபடியாகாது என்ற ஒரு விதியும் அவ்வுரிமத்திலே சேர்க்கப்பட்டிருந்தது.


ஆரம்பக் கட்டமைப்பு
கம்பனியின் ஆளுநரும், 24 இயக்குனர்களும் கொண்ட இயக்குனர் சபை அதன் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவர்களை, உரிமையாளர் சபை நியமனம் செய்தது. இதனால், இயக்குனர்சபை, உரிமையாளர் சபைக்குப் பொறுப்புடையதாக இருந்தது. இயக்குனர் சபையின் கீழ் 10 குழுக்கள் இயங்கி வந்தன.

இந்தியாவில் காலூன்றியமை
இந்துப் பெருங்கடல் பகுதியில் கம்பனி வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், சுவாலிப் போரில், கம்பனி போத்துக்கீசரைத் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், கம்பனிக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த கம்பனி, பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசைக் கம்பனி கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ (Sir Thomas Roe) என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாகக் கம்பனி ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார்.


விரிவாக்கம்
இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ், கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரைக், கம்பனி பின்தள்ளியது. கம்பனி, சூரத், மதராஸ்(இப்பொழுது சென்னை) (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில், கம்பனிக்கு இந்தியாவில், பக்டறிகள் (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை, வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள சென் ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆயின.

கம்பனியின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (indigo), பொட்டாசியம் நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். மலாக்கா நீரிணைப் பகுதிகளில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல், வெள்ளி உலோகத்துக்காகத் தேயிலையை வாங்குவதற்காகச் சீனாவிலுள்ள காண்டனில் புறக் காவல்நிலை ஒன்றையும் கம்பனி நிறுவியது.

1670 ஆம் ஆண்டளவில், இரண்டாவது சார்ள்ஸ் மன்னர், கம்பனிக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும், நாணங்களை வெளியிடவும், கோட்டைகள், [[படை]கள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில், குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், கம்பனிக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும், பிற வல்லரசுகளாலும், பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த கம்பனி தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல், பெஉம்பாலும், அந்நந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளைக் கம்பனி உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில், வலிமை மிக்க படைபலத்துடன், வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச், சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு தனி நாடாகவே செயற்பட்டுவந்தது

World Trade Organization WTO

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)


142 நாடுகள் உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization WTO) உறுப்பினராக இருக்கின்றன. கதார் நாட்டின் டோஹா நகரத்தில் இந்த நாடுகளின் மந்திரிகள் மாநாடு நான்காவது முறையாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. (இந்தக்கட்டுரைSunday November 11, 2001 எழுதப்பட்டது). எதிர்பார்ப்பு : பல்முனை வர்த்தக ஒப்பந்தங்கள். ஆனால் பெரும் கருத்து வேறுபாடுகளினால் மீண்டும் ஒரு முறை சந்தித்துப் பேச வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.


உருகுவே நாட்டில் நடந்த ஒரு பேச்சுவார்த்தையின் பயனாக இந்த உலக வர்த்தக நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் ஒரு பேச்சுவார்த்தை முடிந்து முடிவுக்கு வர எட்டு வருடங்கள் ஆயின.


தென்னாப்பிரிக்காவின் வர்த்தக தொழில்துறை மந்திரி அலெக் எர்வின் அவர்கள் 'இன்னும் ஒரு சுற்றுப்பேச்சு இல்லையெனில், இந்த வர்த்தக நாடுகள் இந்த சுற்றுப்பேச்சிலிருந்து வெளியேறும் ' என்று எச்சரிக்கிறார். 'இன்றைய உலக வர்த்தக நிறுவனச் சட்டங்கள் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியவை. இவை பலனளிக்கக் கூடியவை. இதற்கு மாற்று குழப்பம்தான் ' என்றும் எச்சரிக்கிறார்.


தென்னாப்பிரிக்காவும் இன்னும் சில வளரும் நாடுகளும் ( பிரேசில், நைஜீரியா, எகிப்து, அர்ஜன்டினா, சிலி ஆகியவை) ஒரு கூட்டணியை உருவாகி இருக்கின்றன. இது ஜீ- தெற்கு என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் குழு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தை ஆரம்பிக்க வேண்டுமென்று விரும்புகின்றன.


இதற்கு எதிராக 'Like-Minded Group ' என்றழைத்துக்கொள்ளும் ஒத்த கருத்துக்கள் உள்ள நாடுகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், சிங்கப்பூர், போன்ற தெற்காசிய நாடுகளும், இன்னும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் மிகக்குறைந்த முன்னேற்றமே கொண்ட நாடுகளும் என்று சுமார் 49 நாடுகள் இணைந்திருக்கின்றன.


'ஒத்த கருத்து கூட்டணி ' கூறுவதென்னவென்றால், புது பேச்சுவார்த்தை சுற்று தேவையில்லை என்பதும், அப்படி புது பேச்சுவார்த்தை சுற்று வேண்டுமெனில் உலக வர்த்தக அமைப்பில் பெரும் மாறுதல்கள் நடந்ததன் பின்னரே அது நடக்க வேண்டுமென்றும் கோருகிறது. உலக மயமாதலின் விளைவாக, ஏழை நாடுகளின் வளர்ச்சி வீதம் பெருமளவு வீழ்ந்துவிட்டதால், சமமாக போட்டியிட முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் விவசாயத்துக்கு கொடுக்கும் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மானியம் காரணமாக சமச்சீர்ப் போட்டி இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.


உருகுவே நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு நடந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வ வேண்டி கேட்கின்றன. எவ்வாறு அவை நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பது மட்டுமே விவாதிக்கப்பட வேண்டுமென்றும் கேட்கின்றன. இதற்குள் வருபவை 'அறிவுஜீவி சொத்துகள் intellectual property, விவசாயம், மான்யங்கள், ஏழை நாடுகளின் பொருட்களுக்கு கொடுக்க வேண்டிய பிரத்தியேக கோட்டா முறை ஆகியவை.


மறுபுறம், ஜி- தெற்கு நாடுகள் வளர்ந்த நாடுகளின் 'புதிய பிரச்னைகளை ' முன்னுக்குத் தள்ளுகின்றன. இவை முதலீடு, போட்டி, கொள்முதல், சுற்றுச்சூழல், தொழிலாளர் தகுதரம் போன்றவை.


இதைத் தாண்டி, கைர்ன்ஸ் குழு Cairns Group இருக்கிறது. இந்தக்குழு ஆஸ்திரேலியாவால் தலைமை தாங்கப்பட்டு, உலக விவசாய ஏற்றுமதி செய்யும் சுமார் 18 முக்கிய நாடுகளின் கூட்டணியாக இருக்கிறது. 1986இல் உருவாக்கப்பட்ட இந்தக்குழு விவசாயத்தை பன்முக வர்த்தக கோட்பாட்டின் உள்ளே வைக்கவும் அதை அங்கேயே இருத்திக்கொள்ளவும் முயன்று வெற்றி பெற்றிருக்கிறது. இது தொடர்ந்து விவசாயப்பொருள்கள் விற்பனை தாராளமயமாக்கப் பட வேண்டும் என்று தொடர்ந்து வறுபுறுத்தி வருகிறது. இந்தக்குழுவில் அர்ஜண்டினா, கனடா, இந்தோனேஷியா, மலேசியா நியூசிலாந்து போன்றவை அடக்கம்.


உலக வர்த்தக நிறுவனத்தின் பேச்சுக்களில் விவசாயம் தொடர்ந்து பிரச்னைக்குள்ளான விஷயமாக இருந்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா ஜப்பான் போன்ற நாடுகளின் விவசாயப்பொருள்கள் இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறது.


டோஹா மந்திரிகள் மாநாட்டிலிருந்து வெளிவரக்கூடிய முக்கியமான ஆவணம், மந்திரிகளின் அறிக்கை. இந்த அறிக்கையே உலக வர்த்தக நிறுவனத்தின் வேலையையும், அது எந்த அளவு அதன் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் என்பதையும் குறிக்கும். தோஹாவில் அமைச்சர்கள் தரும் முதல் நகலை விவாதிப்பார்கள் . உலக வர்த்தக அமைப்பு பொதுக் குழுவின் தலைவர், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் , உலக வர்த்தக அமைப்பு ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆவணத்தை விவாதித்து உருவாக்குவார்கள். மேற்கொண்டு விவாதம் இதனை அடிப்படையாய்க் கொண்டு அமையும் என்பதால் இந்த முதல் நகல் மிக முக்கியமானது.